உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2000 கிடைக்கவில்லை

மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2000 கிடைக்கவில்லை

விவசாயிகள் வேதனைகடலாடி: கடலாடி வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 2000 நிதி முறையாக வழங்கப்படுவதில்லை என வேதனை தெரிவித்தனர். கடலாடி அருகே கண்டிலான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கதிரேசன் கூறியதாவது:பொதுவாக கடலாடி வேளாண் துறை அலுவலகத்தில் மாநில அரசின் திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன.மத்திய அரசின் சார்பில் நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ. 2000 விளை நிலத்தின் பட்டா உரிமையாளர்களான விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் இத்தொகை வரவு வைக்கப்படுகிறது.லோக்சபா தேர்தலுக்கு பிறகு வழக்கமான நடை முறையில் உள்ள நிலையில் கடலாடி வேளாண் துறை அலுவலகத்திற்கு சென்று கேட்டால் மாநில அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 விதம் பெறுகிறீர்கள். ஆகவே மத்திய அரசின் நிதி ரூ.2000 பெறுவது இயலாது என அலைக்கழிக்கின்றனர். எனவே முறையான பயனாளிகளை கண்டறிந்து மத்திய அரசின் நிதியை கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீதமுள்ள தொகையை திருப்பி அனுப்பும் செயலை நிறுத்தி முறையான விவசாயிகளை கண்டறிந்து வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ