உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் சுகாதாரக்கேடு 

 மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் சுகாதாரக்கேடு 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் கழிவு நீர் கசிந்து தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. நோயாளிகளுக்கு கூடுதல் நோய் பரவும் அபாயம் உள்ளது.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துமனையில் ரூ.154.84 கோடியில் 500 படுக்கைகளுடன் புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வந்து ஓராண்டு ஆகிறது.இங்குள்ள 5 தளங்களில் இருந்தும் வெளியேறும் கழிவு நீர் குழாய்களில் கொண்டு வரப்பட்டு கீழ் தளத்தில் உள்ள மூடப்பட்ட கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது.கழிவு நீர் கீழ் தளத்திற்கு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டு மக்கள் நடந்து செல்லும் பாதையில் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும், மக்களுக்கும் நோய் பரவும் நிலை உள்ளது. எனவே மருத்துவமனை நிர்வாகம் கீழ்தளத்தில் கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ