உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தி.மு.க., பொதுக்கூட்டத்தில்  காலியாக கிடந்த சேர்கள்

தி.மு.க., பொதுக்கூட்டத்தில்  காலியாக கிடந்த சேர்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள் வராததால் சேர்கள் காலியாக கிடந்தன.ராமநாதபுரம் அரண்மனைத் திடலில் மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதியை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மேடையின் முன்பகுதியை தவிர்த்து எதிர்புறத்தில் ஏராளமான சேர்கள் காலியாக கிடந்தன. குறிப்பாக தலைமைக்கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இரவு 8:00மணிக்கு பேசத்துவங்கிய போது பெரும்பாலானோர் பாதியில் எழுந்து சென்றனர். அவர்களை கூட்டம் சிறிது நேரத்தில் முடிந்து விடும் என தி.மு.க., நிர்வாகிகள் சேர்களில் அமர வைக்க சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை