உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளியில் சோலார் டிஜிட்டல் வகுப்பறை திறப்பு விழா

பள்ளியில் சோலார் டிஜிட்டல் வகுப்பறை திறப்பு விழா

உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கை அருகே திருப்புல்லாணி ஒன்றியம் எல்.கருங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சூரிய சக்தியில் (சோலார்) இயங்கும் ஸ்மார்ட் வகுப்பறையை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் திறந்து வைத்தார். சூரிய சக்தி அடிப்படையிலான டிஜிட்டல் வகுப்பறையின் சிறப்பு குறித்து கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். திருப்புல்லாணி வட்டார கல்வி அலுவலர் ஜெயா, மாவட்ட வளர்ச்சி அலுவலர் நபார்டு வங்கி அருண்குமார், வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை ஆறுமுக வள்ளி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பாரதிய விகாஸ் அறக்கட்டளை திட்ட மேலாளர் மனோகர் கட்ஜெர்ரி மற்றும் செல்கோ சோலார் நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !