உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊடுருவலை தடுக்க தனுஷ்கோடியில் வீரர்கள் உஷார்

ஊடுருவலை தடுக்க தனுஷ்கோடியில் வீரர்கள் உஷார்

ராமேஸ்வரம்:-ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடல்வழியாக அன்னியர்கள் ஊடுருவலை தடுக்க இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ஹோவர்கிராப்ட் கப்பலில் ரோந்து சுற்றி உஷார் நிலையில் உள்ளனர்.ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து 35 கி.மீ.,ல் இலங்கை தலைமன்னார் உள்ளது.இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக தங்க கட்டிகள் கடத்தி வருவதும், தனுஷ்கோடி அருகே கடலோர பகுதியில் இருந்து கஞ்சா, போதை மாத்திரைகள், மஞ்சள், இஞ்சி போன்றவற்றை இலங்கைக்கு கடத்தி செல்வதும் நடக்கிறது.இந்த கடத்தல்காரர்கள் போர்வையில் இலங்கையில் இருந்து அன்னியர்கள் ஊடுருவி இந்தியாவிற்குள் சதிச் செயலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ரோந்துக் கப்பலில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர்.கடந்த சில நாட்களாக தனுஷ்கோடியில் பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் இந்திய வீரர்கள் ஹோவர்கிராப்ட் கப்பலில் ரோந்து சுற்றி வந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் அதனை நிறுத்தி வைக்கின்றனர். அன்னியர்கள் ஊடுருவும் தகவல் கிடைத்தால் அவர்களை கைது செய்ய தயார் நிலையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ