தந்தையின் உடலை தானம் செய்த மகன்கள்
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் பாண்டுகுடியில் இறந்த திருமலை 85, என்பவரின் உடலை அவரது மகன்கள் திருச்சி அரசு மருத்துவ கல்லுாரிக்கு தானம் செய்தனர். திருவாடானை அருகே பாண்டுகுடியை சேர்ந்தவர் திருமலை. கான்ட்ராக்டர். இவரக்கு மனைவி லட்சுமி, மகன்கள் பாரதிதாசன், கார்த்திகை. உடல்நலக்குறைவால் திருமலை இறந்தார். அவரது உடலை தானம் செய்ய மகன்கள் விரும்பினர்.அதன்படி இறந்த சிறிது நேரத்தில் திருமலை உடலை காரில் ஏற்றி திருச்சியில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிக்கு கொண்டு சென்று தானம் செய்தனர்.கார்த்திகை கூறுகையில்'' இறந்த உடலை மண்ணில் புதைப்பதை விடமருத்துவ கல்லுாரிக்கு கொடுத்தால் மாணவர்கள் ஆய்வுக்கு பயன்படும்.மற்றவர்களும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தந்தையின் உடலை தானம் செய்தோம்'' என்றார்.