மேலும் செய்திகள்
வெப்பம் தணிந்து மழையால் மக்கள் மகிழ்ச்சி
12-Mar-2025
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்தில் பெய்த மழையால் பள்ளி, கல்லுாரி சென்ற மாணவர்கள் சிரமப்பட்டனர்.முதுகுளத்துார் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின்தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் சிரமப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது மழை பெய்தது.நேற்று முன்தினம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்ததால் ஒருசில பள்ளிகளுக்கு காலை மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. அவ்வப்போது பெய்த மழையால் மாணவர்கள் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றனர். இதனால் மதியம் உணவு இடைவேளையின் போதும் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர். அத்தியாவசிய வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர். முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதிமாக மாறியதால் மக்கள் சிரமப்பட்டனர். பேரூராட்சி பணியாளர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.* ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தேவிபட்டினம் மெயின் பஜார், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், வர்த்தகர்களும், பொதுமக்களும் சிரமப்பட்டனர். இங்கு மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் தேங்குவதாக மக்கள் குற்றம் சாட்டினர். எனவே ஊராட்சி நிர்வாகம் மழைநீர் விரைவாக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
12-Mar-2025