உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செயற்கை இழை ஓடுதளம்; ராமநாதபுரம் விளையாட்டு மைதானத்தில் தேவை ; தடகளப் பயிற்சிக்கு வெளியூர் செல்வதில் சிரமம்

செயற்கை இழை ஓடுதளம்; ராமநாதபுரம் விளையாட்டு மைதானத்தில் தேவை ; தடகளப் பயிற்சிக்கு வெளியூர் செல்வதில் சிரமம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் செயற்கை இழை ஓடுதளம் (சிந்தடிக்) வசதியின்றி தடகளப்போட்டியில் சாதிக்கும் வீரர், வீரங்கனைகள் மாநில, தேசிய போட்டிகளுக்கு பயிற்சி பெறுவதற்காக வெளி மாவட்டங்களுக்கு சென்று வர சிரமப்படுகின்றனர். ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதித்து வருகின்றனர்.குறிப்பாக தடகளத்தில் கமுதியை சேர்ந்த நாகநாத பாண்டியன் 2020 டோக்கியோ ஒலிம்பிக், உலக தடகள சாம்பியன் போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அது மட்டுமல்லாமல் ராமநாதபுரம் வீரர் சரண் ஆசிய ஜூனியர் அத்லெடிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.கேலோ இந்தியா தேசிய போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தடகள வீரர், வீராங்கனைகள் பதக்கம் வென்றுள்ளார். மேலும் பள்ளி கல்வித்துறை நடத்தும் தேசிய தடகள போட்டியிலும் பதக்கங்கள் வென்று வருகிறார்கள். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கம் 12 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்குள்ள 400 மீட்டர் ஓடுதளம் மைதானம் மண் தரையாக உள்ளதால் மாநில, தேசிய போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனை தடகளப்பயிற்சி பெற சிரமப்படுகின்றனர். ஒவ்வொரு முறையும் சென்னை, திருச்சி, மதுரை சென்று பயிற்சி பெறுகிறார்கள். எனவே ஹாக்கி மைதானம் போன்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் செயற்கை இழை தடகள ஓடுதளம் அமைக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் கூறுகையில், ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி மைதானத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் திட்டம் உள்ளது. இதனை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ