உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அருப்புக்கோட்டை டி.எஸ்.பி.,யின் கூந்தலை பிடித்து தாக்கியவர் கைது

அருப்புக்கோட்டை டி.எஸ்.பி.,யின் கூந்தலை பிடித்து தாக்கியவர் கைது

அருப்புக்கோட்டை : ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்த லோடு வேன் டிரைவர் காளிக்குமார், 33. இவரை, நேற்று முன்தினம் காலை, திருச்சுழி ரோடு கேத்த நாயக்கன்பட்டி விலக்கு அருகே, பைக்கில் வந்த நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். அவருடைய உடல், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, காளிக்குமாரின் உறவினர்கள் நேற்று மதியம், 12:30 மணிக்கு, அருப்புக்கோட்டை -- திருச்சுழி ரோட்டில் மறியல் செய்ய முயன்றனர். அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., காயத்ரி தலைமையில் போலீசார் மறியல் செய்தவர்களை தடுக்க முயன்றனர்.அப்போது, போலீசாருக்கும், மறியல் செய்தவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், மறியல் செய்தவர்கள் டி.எஸ்.பி., தலை முடியை பிடித்து இழுத்து தாக்கினர். தகவலறிந்த எஸ்.பி., கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்தார். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, நெல்லிகுளத்தைச் சேர்ந்த பாலமுருகன், 30, என்பவரை கைது செய்தனர். மேலும், ஆறு பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக, செம்பொன் நெருஞ்சியை சேர்ந்த காளீஸ்வரன், 24, லட்சுமணன், 23, அருண்குமார், 24, மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த சக்திவேல் மகன் பாலமுருகன், 23, ஆகியோரை திருச்சுழி டி.எஸ்.பி., ஜெகநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை