உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் பழைய சுகாதார வளாக கட்டடம்

திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் பழைய சுகாதார வளாக கட்டடம்

கமுதி: கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டில்உள்ள பழைய சுகாதார வளாகம் பராமரிப்பு பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது.கமுதி பேரூராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட காமாட்சி செட்டியார் தெரு, சுப்பையா தேவர் காலனி, பஜனைமட தெருக்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு காமாட்சி செட்டியார் தெருவில் பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.முறையாக பராமரிப்பு செய்யப்படாததால் புதர் மண்டி பயனற்ற நிலையில் மாறியது. இதுகுறித்து6 மாதத்திற்கு முன்பு தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கமுதி பேரூராட்சி சார்பில் துாய்மை பாரத இயக்கம் 2024--25 திட்டத்தில் ரூ.5.25 லட்சத்தில் புதிதாக பராமரிப்பு பணி நடந்தது. பணிகள் முடிவற்ற நிலையில் தற்போது வரை சுகாதார வளாகம் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பழைய சுகாதார வளாகத்தை புதிதாக சீரமைத்துள்ள நிலையில் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. அதிகாரிகள்விரைவில் சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி