உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தங்கச்சிமடத்தில் திறக்கப்படாமல் முடங்கி கிடக்கும் கோயில் பூங்கா

தங்கச்சிமடத்தில் திறக்கப்படாமல் முடங்கி கிடக்கும் கோயில் பூங்கா

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் கோயில் மங்கள தீர்த்தம் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் முடங்கி கிடக்கிறது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான பூங்கா 10 ஏக்கரில் தங்கச்சிமடம் ஊராட்சி மங்கள தீர்த்தம் அருகில் உள்ளது. இங்கு பூங்கா அமைக்க ஊராட்சி நிர்வாகம் மற்றும் பசுமை ராமேஸ்வரம் அமைப்பு இணைந்து மூலிகை செடிகள், நிழல் தரும் மரங்கள் வளர்த்து பொதுமக்களுக்கான நடைபயிற்சி பாதை, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைத்து 2019ல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. ஆனால் பூங்காவை ஊராட்சி நிர்வாகம் பராமரிக்க கோயில் நிர்வாகம் அனுமதிக்காமல் கையகப்படுத்தியது. இதன் பின் பூங்காவுக்குள் மக்கள் செல்ல அனுமதிக்காமல் கோயில் நிர்வாகம் பூட்டியது. இதனால் இங்குள்ள மூலிகை செடிகள் கருகியது. மேலும் சமூக விரோதிகளால் விளையாட்டு உபகரணங்கள் உடைக்கப்பட்டு வீணாகிறது. ரூ. 10 லட்சம் செலவில் உருவான பூங்காவை மக்கள் 30 நாட்கள் கூட பயன்படுத்தாமல் முடங்கியது அதிர்ச்சி அளிக்கிறது.எனவே முடங்கி கிடக்கும் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ