உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பசுமை பள்ளியாக திருவாடானை அரசு பெண்கள் பள்ளி தேர்வு

பசுமை பள்ளியாக திருவாடானை அரசு பெண்கள் பள்ளி தேர்வு

திருவாடானை : திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பசுமை பள்ளியாக தேர்வாகியுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல், ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதவிர மாணவர்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் கலை திருவிழாக்கள் நடத்தபடுகின்றன. மேலும் பள்ளி வளாகத்தை பாதுகாக்கும் வகையில் பசுமைப் பள்ளி திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரக்குடி (ஆண்கள், பெண்கள்) ஆகிய இரண்டு பள்ளிகள் பசுமைப் பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் மழை நீர் சேகரிப்பு, மக்கும் உரம் தயாரிப்பு, காய்கறி தோட்டங்கள் அமைத்தல், நீர் பயன்பாட்டை குறைத்தல், கழிவுநீர் மறுசுழற்சி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளபடும். திட்டத்தை செயல்படுத்த தலா ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருவாசகமணி கூறியதாவது:அரசு பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் திறனை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய திட்டமாக பசுமைப் பள்ளி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இவை அனைத்தையும் மாணவிகளே மேற்கொள்வார்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை