உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இருவேறு விபத்துகளில் மூவர் மரணம் 11 பேர் காயம்

இருவேறு விபத்துகளில் மூவர் மரணம் 11 பேர் காயம்

குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார், காந்தி நகரை சேர்ந்த டிரைவர் முருகன், 40. இவரது மகன் பாலாஜி, 15. நேற்று முன்தினம் இரவு முருகன், மாமனார் ராசு, பாலாஜி ஆகிய மூவரும் ஒரே டூ - வீலரில், குஜிலியம்பாறை மல்லபுரத்தில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். டூ - வீலரை முருகன் ஓட்டினார்.குஜிலியம்பாறை மல்லபுரம் ரோட்டில் கன்னிமேக்கிப்பட்டி பிரிவு அருகே சென்றபோது, எதிரே வந்த கார் மோதியதில் முருகன், ராசு இறந்தனர். காயமடைந்த பாலாஜி சிகிச்சை பெறுகிறார். கார் டிரைவர் மோகன்ராஜ்மீது குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.வேடசந்துார், தண்ணீர்பந்தம்பட்டியை சேர்ந்த வேன் டிரைவர் ராமச்சந்திரன், 31. இவர், விட்டல்நாயக்கன்பட்டி தனியார் நுாற்பாலையில் நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு தொழிலாளர்களை ஏற்றி வேடசந்துார் சென்றார். விட்டல்நாயக்கன்பட்டி வேடசந்துார் நெடுஞ்சாலையில் சென்றபோது, தன் வேனை ஓரமாக நிறுத்தி விட்டு, அதே சாலையில் பஞ்சராகி நின்ற வேறொரு வேனுக்கு உதவி செய்தார். அப்போது, திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற லாரி, ராமச்சந்திரன் வேன் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில், அந்த வேனில் இருந்த எரியோடு, எருதப்பன்பட்டியை சேர்ந்த ராஜாமணி, 50, இறந்தார்; 11 பேர் காயமடைந்தனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ