உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரெகுநாதபுரம் வாரச்சந்தையில் மழை நீரை அகற்ற வேண்டும் வியாபாரிகள் வேதனை

ரெகுநாதபுரம் வாரச்சந்தையில் மழை நீரை அகற்ற வேண்டும் வியாபாரிகள் வேதனை

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரத்தில் 2024 ஜூலை மாதம் சனிக்கிழமை தோறும் புதிய வார சந்தை துவக்கப்பட்டது. இந்த வாரச்சந்தையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.ரெகுநாதபுரம், முத்துப்பேட்டை, பெரியபட்டினம், தாமரைக்குளம், பிரப்பன் வலசை, காரான், நயினா மரைக்கான், பத்திராதரவை, வண்ணாங்குண்டு, வாலாந்தரவை, வழுதுார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரக்கூடிய மக்கள் சனிக்கிழமை வாரச்சந்தையால் பயனடைகின்றனர்.கடந்த டிச.,ல் பெய்த தொடர் மழையால் 3 ஏக்கரில் வாரச்சந்தையில் மழை நீர் தேங்கிய நிலையில் தற்போது வரை குளம் போல் காணப்படுகிறது. வாரச்சந்தை வியாபாரிகள் தற்காலிகமாக அமைத்துள்ள பந்தல்கள் பயன்பாடின்றி உள்ளது.கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வாரச்சந்தை வியாபாரிகள் ரெகுநாதபுரம் முத்துப்பேட்டை செல்லும் பிரதான சாலை ஓரங்களில் கடை விரிகின்றனர். சந்தை வியாபாரிகள் கூறியதாவது: முன்பு ரெகுநாதபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக இயங்கி வந்தது. தற்போது தனி அலுவலரால் நிர்வகிக்கப்படும் ரெகுநாதபுரம் ஊராட்சியில் சந்தைக்கு, பெரிய கடை மற்றும் சிறிய கடைக்கு ரூ.100, 50, 30 என்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி சந்தைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் அந்நீரை அகற்றுவதற்கான முயற்சியின்றி அப்படியே உள்ளது. ஒவ்வொரு வாரமும் சாலையின் இரு புறங்களிலும் கடைகள் வைக்க வேண்டிய நிலை உள்ளதால் போக்குவரத்து நெரிசலில் திணறி வருகின்றனர்.எனவே ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர் பாட்ஷா தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மராமத்து பணிகளை செய்யவும் சந்தை வியாபாரிகளுக்கான கடைகள் அமைப்பதற்கான கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்றனர்.எனவே திருப்புல்லாணி யூனியன் அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை