உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்: போலீசார் ஒழுங்குபடுத்துவார்களா

ராமநாதபுரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்: போலீசார் ஒழுங்குபடுத்துவார்களா

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவிப்பதால் தீர்வு காண போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதபுரம் நகர் மதுரை ரோட்டில் ரோடு மிகவும் குறுகிய பகுதியாக இருப்பதாலும், வாகன ஓட்டிகள் வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்துவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பழைய பஸ் ஸ்டாண்ட் நுழைவுப் பகுதி, ராமநாதபுரம் புதிய பஸ்ஸ்டாண்ட் சிக்கனல் முதல் ரோமன் சர்ச் வரையுள்ள பகுதிகளில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. முகூர்த்த நாட்களில் வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. குறுகிய ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது.இதனால் எளிதில் வாகனங்கள் செல்லும் ரோடுகள் ஸ்தம்பிக்கின்றன. இதனால் இரு புறமும் வாகனங்களில் வரிசை கட்டி செல்லவதற்கு வழியில்லாமல் நிற்கின்றனர். இப்பகுதிகளில் ரோடுகளில் நிறுத்தும் வாகனங்களை அப்புறப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போது தான் ரோட்டில் வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்ல முடியும். வணிக வளாகங்களுக்கு செல்பவர்களுக்கு வாகனங்கள் நிறுத்த ஒரு பகுதியை மட்டும் ஒதுக்கி கொடுக்கலாம்.மற்ற பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசார் முன் வர வேண்டும்.உயிர் காக்கும் பணியில் உள்ள ஆம்புலன்ஸ்கள் கூட போக்குவரத்து இடையூறுகளில் சிக்கிக் கொள்வதால் பலர் சிகிச்சைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ