உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் 5 நாட்களாக உடைத்த ரோட்டில் பயணம் சித்திரை விழாவிற்கு சிக்கல்

பரமக்குடியில் 5 நாட்களாக உடைத்த ரோட்டில் பயணம் சித்திரை விழாவிற்கு சிக்கல்

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி கவுரி அம்மன் கோயில் பகுதியில் உடைக்கப்பட்ட ரோட்டில் 5 நாட்களாக மக்கள் ஆபத்தான பயணம்செய்யும் நிலை உள்ளது.இதனால் சித்திரை தேரோட்டத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.பரமக்குடி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சிமென்ட் ரோடு மற்றும் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையிலும் முன்பு டெண்டர் விடப்பட்ட பணிகளை செய்யும் நிலை உள்ளது.கவுரி அம்மன் கோவில் தெரு, கன்னி சுந்தரராஜன் தெரு, காளிதாஸ் பள்ளிக் கூட தெரு சந்திப்பில் உள்ள ரோட்டை கடந்த 5 நாட்களுக்கு முன் உடைத்தனர். ஆனால் புதிய ரோடு அமைக்காமல் அப்படியே உள்ளது. ஏப்.12 முதல் ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழா துவங்க உள்ளது. இதன் வழியாக ஏற்கனவேதரைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதுடன் சின்ன கடை தெருவிற்கு அதிகமான மக்கள் செல்வர்.இந்நிலையில் ஈஸ்வரன்மற்றும் பெருமாள் கோயில் சுவாமிகள் செல்லும் ரத வீதியாகவும்இருக்கிறது. இதன் வழியாக செல்லும் மக்கள் மற்றும் மாணவர்கள் தடுமாறுகின்றனர். எனவே வரும் நாட்களில் திருவிழா உட்பட மக்களும் எளிதான பயணம் மேற்கொள்ள உடனடியாக பணிகளை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி