உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டியில் மீன்பிடித்த துாத்துக்குடி மீனவர்கள்

தொண்டியில் மீன்பிடித்த துாத்துக்குடி மீனவர்கள்

தொண்டி: தொண்டி அருகே எம்.ஆர்.பட்டினம் கடற்கரை ஓரத்தில் 2 படகுகள் நிறுத்தப்பட்டிருந்தது. அப்பகுதி மீனவர்கள் தொண்டி மரைன் போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் படகில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். துாத்துக்குடியை சேர்ந்த ஐந்து மீனவர்கள் நாட்டுப்படகில் தொண்டி கடலுக்கு வந்து இறால் வலை போட்டு மீன்பிடிக்க வந்ததாக தெரிவித்தனர். போலீசார் படகை சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட சிலிண்டர்களை வைத்து மீன்பிடிப்பது தெரிந்தது. மீன்வளத்துறையினர் அனுமதியும் இல்லை. போலீசார் அவர்களை இப்பகுதியில் மீன்பிடிக்க கூடாது என எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ