மணல் திருடிய இருவர் கைது
தொண்டி: தொண்டி தோமாயாபுரம் பாம்பாற்றில் மணல் திருடுவதாக தகவல் கிடைத்தது. பாகனுார் குரூப் வி.ஏ.ஓ. கிரானவள்ளி புகாரில் எஸ்.பி.பட்டினம் போலீசார் சென்று மணல் அள்ளும் இயந்திரம், ஒரு லாரியை பறிமுதல் செய்தனர். மணல் திருட்டில் ஈடுபட்ட புதுக்காடு சுமேந்திரன் 24, நகரிகாத்தான் சதீஷ்குமார் 32, ஆகிய இருவரையும் கைது செய்து, தப்பி ஓடிய அடுத்தகுடி முருகானந்தம் என்பவரை தேடிவருகின்றனர்.