உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டிராக்டர் மீது டூரிஸ்ட் பஸ் மோதி இருவர் பலி

டிராக்டர் மீது டூரிஸ்ட் பஸ் மோதி இருவர் பலி

திருப்புல்லாணி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கடுகுசந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் டிராக்டர் டிரைவர் வடிவேல் 40. அவருடன் மற்றொரு விவசாயி துரைசாமி 65, சென்றார். இருவரும் நிலக்கடலை அறுவடை செய்யப்பட்ட செடிகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு நையினாமரைக்கான் கிராமத்திற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றனர். வலையனேந்தல் விலக்கு பகுதியில் நேற்று மாலை 5:00 மணிக்கு சென்றபோது, புதுக்கோட்டையில் இருந்து திருச்செந்துார் சென்ற டூரிஸ்ட் பஸ் டிராக்டர் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் வடிவேல், துரைசாமி இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். திருப்புல்லாணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ