உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு வலியுறுத்தல்

தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு வலியுறுத்தல்

திருவாடானை: தெருநாய்களுக்கு கருத்தடை செய்து கட்டுப்படுத்த மக்கள் வலியுறுத்தினர்.திருவாடானை, தொண்டியில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாகனங்களில் செல்வோர், பாதசாரிகளை தெருநாய்கள் விரட்டிக் கடிக்கின்றன. கோழி, ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை நாய்கள் கடித்துக் கொல்வது அதிகரித்துள்ளன.கண்மாயில் இருந்து வெளியேறும் மான்களை கடிப்பதால் ஏராளமான மான்கள் இறந்துள்ளன. தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எனவே நாய்களுக்கு கருத்தடை செய்து கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறியதாவது : ஒரு நாய் ஆண்டுக்கு இரு முறை குட்டி போடும். ஒவ்வொரு முறையும் அதிகபட்சமாக 7 முதல் 8 குட்டிகள் போடும்.அதன்படி ஆண்டுக்கு 15 குட்டிகள் வரை போடும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாய்கள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டன. விலங்குகள் நல அமைப்பினர் இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததால் திட்டம் கைவிடபட்டது.இதனால் தெரு நாய்களின் இனப்பெருக்கம் பெருகியது. தற்போது தெரு நாய்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.பெரும்பாலான நாய்கள் தெருக்களில் கிடக்கும் உணவை சாப்பிட்டு விட்டு ரோட்டோரம் படுத்துக் கிடக்கும். அந்த மாதிரி நாய்களால் தான் தொல்லை அதிகமாக உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி