உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கூரிசாத்த அய்யனார் கோயில் ஊருணியில் குவியும் குப்பை சுத்தம் செய்ய வலியுறுத்தல்

கூரிசாத்த அய்யனார் கோயில் ஊருணியில் குவியும் குப்பை சுத்தம் செய்ய வலியுறுத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கூரிசாத்த அய்யனார் கோயில் அருகேயுள்ள ஊருணி பராமரிப்பின்றி குப்பை கொட்டுவதால் சுகாதாரக்கேட்டில் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரம் மூலக்கொத்தளம் கூரிசாத்த அய்யனார் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முகூர்த்த நாட்களில் திருமணம், காதணி விழாக்கள் நிறைய நடக்கிறது. இக்கோயில் அருகேயுள்ள ஊருணி பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது.இதன் நீர்பிடிப்பு பகுதிகள் மேடாகி வருகின்றன. ஊருணிக்குள் குப்பையை கொட்டுகின்றனர். இதனால் நீர் மாசடைந்துள்ளது. கொசுத்தொல்லையால் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஊருணியில் குப்பை கொட்டுவதை தடுத்தும், துாய்மை செய்து ஊருணியை பயன்படுத்தும் வகையில் படித்துறை அமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை