உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குண்டும் குழியுமான ரயில்வே மேம்பாலம்விபத்திற்கு முன்பு சீரமைக்க வலியுறுத்தல்

குண்டும் குழியுமான ரயில்வே மேம்பாலம்விபத்திற்கு முன்பு சீரமைக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் 24 மணி நேரம் போக்குவரத்து மிகுந்த கீழக்கரை, துாத்துக்குடி செல்லும் வழியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் பல இடங்களில் சேதமடைந்துள்ளதால் விபத்திற்கு முன்பு சீரமைக்க வேண்டும். ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு துாத்துக்குடி செல்லும் வழியில் அரை கி.மீ.,க்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக திருப்புல்லாணி, கீழக்கரை, துாத்துக்குடி, சாயல்குடி என வெளியூர், கிராமங்களுக்கு தினமும் ஏராளமானவர்கள் வாகனங்களில் செல்கின்றனர். 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து உள்ள இந்தப்பாலம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. மழையால் பாலத்தில் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளன. பாலத்திலிருந்து இறங்கும் இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே விபத்திற்கு முன் உடனடியாக பாலத்தில் உள்ள பள்ளங்களை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ