மேலத்துாவலில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலத்துாவல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழாவில் 2ம் ஆண்டு வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடந்தது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15க்கும் மேற்பட்ட காளைகள், 150க்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு காளைக்கும் தலா 9 வீரர்கள் களம் இறக்கப்பட்டு 20 நிமிடம் ஒதுக்கப்பட்டது. போட்டியை ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, நடிகர் அருண்மொழித்தேவன், தொழிலதிபர் முனீஸ்ராமு துவக்கி வைத்தனர். வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு கிராமம் சார்பில் குத்துவிளக்கு, ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. ஒரு சில வீரர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. போட்டியை முதுகுளத்துார் சுற்றியுள்ள கிராம மக்கள் பார்வையிட்டனர்.ஏற்பாடுகளை மேலத்துாவல் கிராம மக்கள் செய்தனர்.