உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வி.ஏ.ஓ., சங்க வட்ட கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு

வி.ஏ.ஓ., சங்க வட்ட கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு

ஆர்.எஸ்.மங்கலம்: தமிழ்நாடு வி.ஏ.ஓ., அலுவலர்கள் ஆர்.எஸ். மங்கலம் வட்ட கிளை சங்க கூட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் மாவட்ட அமைப்பு செயலாளர் சேது அருள் தலைமையில் நடந்தது. ஆர்.எஸ்.மங்கலம் வட்ட கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வட்டக்கிளை தலைவராக திருக்குமரன், செயலாளராக பூப்பாண்டி, பொருளாளராக அப்துல் அஜாருதீன், துணைத் தலைவராக நஜிமா பேகம், துணைச் செயலாளராக பாலகிருஷ்ணன், கொள்கை பரப்புச் செயலாளராக கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட வட்டக்கிளை நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !