உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவிரி குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை பயன்படுத்தி வரும் மரவெட்டி கிராம மக்கள்

காவிரி குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை பயன்படுத்தி வரும் மரவெட்டி கிராம மக்கள்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மரவெட்டி கிராமத்தில் கடந்த பல மாதங்களாகவே அடிப்படை வசதியில்லாமல் சிரமப்பட்டு வரும் நிலையில் கிராமத்திற்கு வரும் காவிரி குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை கிராம மக்கள் வடிகட்டி பயன்படுத்தி வரும் அவலநிலை உள்ளது. சிலர் குடும்பத்துடன் காலி செய்து நகரப்பகுதிக்கு சென்றுள்ளனர்.முதுகுளத்துார் அருகே மரவெட்டி, துலுக்கன்குறிச்சி கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாகவே அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் வசதி ஏதுமில்லாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பஸ் வசதியில்லாமல் மக்கள் 3 கி.மீ.,நடந்து செல்கின்றனர்.கிராம மக்கள் வேறு வழியின்றி நகரப்பகுதிக்கு சென்றுள்ளனர். இங்கு கடந்த சில மாதங்களாகவே முறையாக காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் வேறு வழியின்றி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கிராமத்திற்கு வரும் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகி வரும் குடிநீரை வடிகட்டி பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து லிங்கம் கூறியதாவது:மரவெட்டி, துலுக்கன்குறிச்சியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதிக்கு வரும் காவிரி குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. குடிநீரை வேறு வழியின்றி வடிகட்டி பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. வீணாகும் குடிநீர் வேறு வழியின்றி கண்மாய் மற்றும் விவசாய நிலங்களில் தேங்குகிறது. இதை ஒரு சிலர் விவசாயத்திற்கும் பயன்படுத்துகின்றனர். அதுமட்டும் இல்லாமல் கிராமத்தில் அடிப்படை வசதி இல்லாததால் கிராம மக்கள் ஏராளமானோர்​ பிள்ளைகள் நலன்கருதி நகர் பகுதிக்கு சென்றனர்.தற்போது கிராமங்களில் முதியோர்கள் மட்டும் வசிக்கின்றனர். அவர்களும் முதியோர் உதவித்தொகை, ரேஷன் கடையில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பஸ் வசதி இல்லாததால் முதுகுளத்துாருக்கு நடந்தே செல்கின்றனர். ஒருசில நேரங்களில் டிராக்டர் வராத போது தண்ணீருக்காக அவதிப்படுகின்றனர். காவிரி குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரவு நேரங்களில் தெருக்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் இருளில் மூழ்கியுள்ளது. மக்களும் வெளியில் வருவதற்கே அச்சப்படுகின்றனர். எனவே தனி தீவு போல் மரவெட்டி கிராம மக்கள் வாழ்கின்றனர். கலெக்டர் கிராமத்தில் நேரில் ஆய்வு செய்து சாலை, குடிநீர், தெரு விளக்கு உட்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மரவெட்டி கிராமத்தில் 1971ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் இல்லாததால் பள்ளியும் மூடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ