மேலும் செய்திகள்
வாக்காளர் சரிபார்ப்பு பணி தொடக்கம்
21-Aug-2024
ராமநாதபுரம் : 2025 ஜன.1 தகுதி நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்தது.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து கூறியதாவது: ஜன.1-ஐ தகுதி நாளாகக் கொண்டு நான்கு சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நடக்கிறது. 2025 ஜன.6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இப்பணியானது அக்.18 வரை நடைபெறும்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், பெயர் நீக்கம் செய்தல், 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்தல் பணிகள் நடக்கிறது. வீட்டிற்கு கணக்கெடுப்பு பணிக்கு வரும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விபரங்களை பொதுமக்கள் அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சப்- கலெக்டர் அபிலாஷா கவுர், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் பங்கேற்றனர்.
21-Aug-2024