நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் : -அண்ணா பல்கலை மாணவி மீதான பாலியல் சீண்டலை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத்தலைவர் கண் இளங்கோ தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் பிரேம் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் சட்டசபை தொகுதி செயலாளர் சத்தியபிரகாசம் உட்பட பலர் பங்கேற்றனர்.