உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு திரும்பிய தொழிலாளி வெட்டிக்கொலை

போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு திரும்பிய தொழிலாளி வெட்டிக்கொலை

முதுகுளத்துார் : ராமநாதபுரம் மாவட்டம் கீழத்துாவலில் கொலை வழக்கில் ஜாமின் பெற்றுள்ள தொழிலாளி மோகன் 48, போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு திரும்பிய போது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மே மாதம் நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.முதுகுளத்துார் அருகே புழுதிக்குளத்தில் மே 30 ல் வேலுச்சாமி மகன் கோபால்சாமி 40, முன் விரோதம் காரணமாக நடந்த தகராறில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக்ராஜா, அவரது மாமா செல்வம் மகன் மோகன் 48, பரமேஸ்வரி, சிலையம்மாள், வாணி உட்பட 5 பேரை கீழத்துாவல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மோகன் நிபந்தனை ஜாமின் பெற்று கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷனில் ஆக., 20 முதல் கையெழுத்திட்டு வந்தார். கீழத்துாவலில் உள்ள ஒரு வீட்டில் கூலி வேலை செய்து கொண்டு அங்கே தங்கியிருந்தார்.நேற்று காலை 11:00 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு விட்டு கண்மாய் கரைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் சென்ற 3 நபர்கள் மோகனை வெட்டி சாய்த்தனர். இதில் அவர் சம்பவயிடத்திலேயே இறந்தார். கீழத்துாவல் போலீசார் தப்பிய மூவரை தேடுகின்றனர்.கோபால்சாமி கொலைக்கு பழிக்குப்பழியாக மோகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பகலில் நடந்த இக்கொலை சம்பவத்தையடுத்து அப்பகுதியினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை