உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சோனை கருப்பண்ணசுவாமிக்கு வருடாபிஷேகம்

சோனை கருப்பண்ணசுவாமிக்கு வருடாபிஷேகம்

சாயல்குடி: சாயல்குடி அண்ணா நகரில் உள்ள சோனை கருப்பண்ணசுவாமி கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.மூலவர்கள் சோனை கருப்பண்ணசுவாமி, வீரிய காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்குசிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு சாயல்குடி வழிவிடு முருகன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மூலவர்களுக்கு பாலபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள்நடந்தது. யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் நடந்தது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை அண்ணா நகர் அருந்ததியர் உறவின்முறை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை