மேலும் செய்திகள்
மத்திய நிதியை செலவிடாமல் ஊராட்சிகள்.மெத்தனம்
26-Aug-2025
திருவாடானை:திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ஏழு ஊராட்சிகளில் 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டது. திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும் வரிவசூல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கியமேரிசாராள் கூறியதாவது: வரியினங்கள் வாயிலாக வரும் வருமானம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இதனால் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை பொதுமக்களிடமிருந்து வசூலிக்க ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஒலிபெருக்கி மூலமாகவும், வீடு, வீடாக சென்று மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து ஊராட்சிகளிலும் வரி வசூல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் 100 சதவீதம் வரி வசூல் செய்த பனஞ்சாயல் ஊராட்சி முத்துகண்ணன், நம்புதாளை ஊராட்சி சந்திரமோகன், கலியநகரி ஊராட்சி மார்க்கண்டேயன், மாவூர் ஊராட்சி சண்முகநாதன், கடம்பூர் ஊராட்சி பன்னீர்செல்வம், பழங்குளம் ஊராட்சி பூபாலன், புல்லக்கடம்பன் ஊராட்சி கீதா ஆகிய ஊராட்சி செயலர்கள் 100 சதவீதம் வசூல் செய்தனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அனைத்து ஊராட்சிகளிலும் தீவிரமாக வசூல் பணி நடக்கிறது. பொதுமக்கள் வரியை செலுத்தி ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
26-Aug-2025