உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சுற்றுலா சென்ற 100 மாணவிகள்

விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சுற்றுலா சென்ற 100 மாணவிகள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவியல் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவிகள் திருநெல்வேலி இஸ்ரோ மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில்கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அரசு பள்ளி மாணவிகளுக்கான அறிவியல் சுற்றுலா பயணத்தை துவக்கி வைத்தார். மாணவிகள் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதன்படி தேர்வு செய்யப்பட்ட 100 மாணவிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இஸ்ரோ மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்றுஆராய்ச்சி குறித்து அறிந்து கொள்ள உள்ளனர். உதவி கலெக்டர் (பயிற்சி) முகமது இர்பான், முதன்மை கல்வி அலுவலர் சின்னராஜு, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தேன்மொழி, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ