உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காளியம்மன் கோயிலில் 100 ஆண்டு ஆலமரம்

காளியம்மன் கோயிலில் 100 ஆண்டு ஆலமரம்

திருவாடானை : திருவாடானை அருகே கூத்தகுடி காளியம்மன் கோயிலில் 100 ஆண்டுகளை கடந்து வியப்பை ஏற்படுத்தும் ஆலமரத்தை அப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர்.மரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தன்மை உடையது ஆலமரம். ஆலமரத்தின் வேர் முதல் மரத்தின் நுனி வரை மருத்துவ குணம் கொண்டது. பழங்காலத்தில் ஆண்ட மன்னர்கள் சாலை ஓரங்களிலும், ஊர் எல்லையிலும் ஆலமரம், அரசமரம், புங்கன் மரங்களை நட்டு வைத்தனர்.பல தலைமுறைகளை கடந்துள்ள ஆலமரங்கள் கம்பீரமாக உள்ளன. பல்வேறு இடங்களில் ஆலமரங்களை மக்கள் பாதுகாத்து வருகின்றனர். அந்த வகையில் திருவாடானை அருகே கூத்தகுடி காளி கோயிலில் 100 ஆண்டுகளை கடந்த ஆலமரம் உள்ளது. ஆண்டுதோறும் மாசி மகம் அன்று இக் கோயிலில் திருவிழா நடைபெறும். அப்போது ஆலமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்கள் வணங்குவார்கள். அப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த ஆலமரம் மிகவும் பழமையானது. தற்போது அதன் விழுதுகள் தான் வளர்ந்துள்ளது.தெய்வீக சக்தி உடைய விருட்சம். சிவபெருமானின் அம்சம். ஆண்டுதோறும் மாசி மகம் அன்று காளியம்மனுக்கு திருவிழா கொண்டாடுவோம். அப்போது ஆலமரத்திற்கு என பூஜை செய்து வழிபடுவோம். வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்றனர். ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள இக்கோயிலுக்கு செல்லும் சிலர் அதிகாலையில் தியானம் செய்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !