உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் 12 மணி நேர தொடர் மழை வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்; பழுதான வாகனங்கள்

பரமக்குடியில் 12 மணி நேர தொடர் மழை வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்; பழுதான வாகனங்கள்

பழுதான வாகனங்கள்பரமக்குடி: பரமக்குடியில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று 12 மணி நேரம் கொட்டித் தீர்த்த தொடர் மழையால் தெருக்களில் போக்குவரத்தின்றி மக்கள் வீடுகளில் முடங்கினர். மேலும் டூவீலர் ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் பழுதாகி நின்றன.தமிழகத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இதனால் நேற்று முன்தினம் அதிகாலை 12:00 மணிக்கு பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை துவங்கியது. தொடர்ந்து நேற்று மதியம் 12:00 மணி வரை இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது.இதனால் பரமக்குடி சவுகத் அலி தெரு, பள்ளிவாசல் தெரு, உழவர் சந்தை, ஐந்து முனை ரோடு, பஸ் ஸ்டாண்ட், சந்தை, சின்ன கடை பஜார் உட்பட பல்வேறு தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் ஒட்டுமொத்த வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்ட சூழலில் வாகனங்களில் பழுது ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.மேலும் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து தெருக்களும் வெறிச்சோடியது. மழை நீருக்கு மத்தியில் கழிவுநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்தது.

திருவாடானை

திருவாடானை, தொண்டியில் பலத்த மழையால் ரோட்டில் தேங்கிய நீரால் மக்கள் அவதியடைந்தனர். துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் 12 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.திருவாடானை, தொண்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்ததால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. தேவகோட்டை- வட்டாணம் ரோட்டில் மங்களக்குடியில் குளம் போல் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமபட்டனர்.திருவாடானை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் சென்று மோட்டார் மூலம் நீரை வெளியேற்றினர். மழைக் காலங்களில் அடிக்கடி தண்ணீர் தேங்குவதால் சிரமமாக உள்ளது. ஆகவே தண்ணீர் தேங்காத வகையில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

12 மணி நேரம் மின்தடை

திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு பழுது ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். மதியம் 2:00 மணிக்கு மின்சப்ளை வழங்கப்பட்டது. இதனால் 12 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.மழையால் திருவாடானை வடிவேலன், பண்ணவயல் முருகேஸ்வரி, கல்லுார் இருளாயி, மருதங்குடி மலையாண்டி, உமைஉடையான் மடை பாலாமிர்தம் ஆகியோருக்கு சொந்தமான ஓட்டு வீடுகள் சேதமடைந்தது. வருவாய்த்துறை அலுவலர்கள் பார்வையிட்டு நிவாரணம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை