உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கைக்கு கடத்த முயன்ற 1352 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற 1352 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 1352 கிலோ பீடி இலையை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். தலைமுறைவான இருவரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் (ஆக., 17) மாலை இடையர் வலசை ஜங்ஷன் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பரமக்குடியில் இருந்து சென்ற மினிலாரியை நிறுத்த முயன்றனர். ஆனால் மினி லாரி நிற்காமல் செல்ல போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். லாரி டிரைவர் புதுமடம் தெற்கு தெருவைச் சேர்ந்த நசீர் மகன் ஆரிஸிடம் 19, விசாரித்தனர். ஆரிஸ் போலீசாரிடம் கூறுகையில், ''வெளிமாநிலத்தில் மொத்தமாக வாங்கப்படும் பீடி இலைகளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி சென்றால் கூடுதல் லாபம் கிடைக்கும். தற்போது மண்டபம் மேற்கு தெருவைச் சேர்ந்த மகாவீர், செய்யது அலி ஆகியோர் இரட்டையூரணி அருகே வந்து பீடி இலையை தருமாறு தெரிவித்துள்ளனர். அங்கிருந்து இலங்கைக்கு கடத்த திட்டமிட்டுள்ளனர்,'' என்றார். இதையடுத்து மினி லாரியில் இருந்த தலா 32 கிலோ வீதம் 42 மூடைகளில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான 1352 கிலோ பீடி இலையை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆரிைஸ கைது செய்து தலைமறைவான மகாவீர், செய்யது அலியை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை