மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது
23-Jul-2025
ராமேஸ்வரம்; நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜூலை 28ல் ராமேஸ்வரத்தில் இருந்து 391 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்திய இலங்கை எல்லையில் மீன்பிடித்த போது இலங்கை கடற்படை வீரர்கள் விரட்டினர். ஜஸ்டின் என்பவரது படகில் இருந்த மீனவர்கள் வலையை இழுக்க தாமதமானதால் இலங்கை கடற்படை வீரர்கள் அவர்களை பிடித்தனர். படகில் இருந்த ஜஸ்டின் 56, மோபின் 20, சைமன் 53, சேகர் 50, டெனின் 36, ஆகியோரை கைது செய்து மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் இவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களை ஆக.7 வரை வவுனியா சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பாம்பன் மீனவர்கள் 9 பேர் ஜூலை 27ல் பாம்பன் இருந்து டேவிட் என்பவரது நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் டிகோசன் 24, களஞ்சியராஜ் 44, ஆனந்தன் 49, முருகேசன் 51, முருகதாஸ் 41, மாரியப்பன் 38, சக்திவேல் 24, கோட்டைச்சாமி 45, பாலமுருகன் 42, ஆகிய 9 பேரை நேற்று காலை இலங்கை கடற்படையினர் கைது செய்து கல்பெட்டியா போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து புத்தளம் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை விடுவிக்க கோரி தங்கச்சிமடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்களின் குடும்பத்தினர் மறியல் செய்தனர். போலீசார் சமரசத்திற்கு பின் கலைந்து சென்றனர். இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
23-Jul-2025