உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் தெரு நாய்க்கடிக்கு கடந்தாண்டில்..15,247 பேருக்கு சிகிச்சை

ராமநாதபுரத்தில் தெரு நாய்க்கடிக்கு கடந்தாண்டில்..15,247 பேருக்கு சிகிச்சை

மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பெயர ளவில் நாய்கள் இனப் பெருக்க தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக தெருநாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அவை உணவிற்காக குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக திரிகின்றன. சில வெறி நாய்கள் மக்களை கடிக்கின்றன. கோழி, ஆடுகளை கடிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. நாய்கள் தொல்லையால் சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர அச்சப் படுகின்றனர். மேலும் போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலையில் கூட்டமாகத் திரிகின்றன. இதனால் இரவு நேரங்களில் சிறிய அளவில் விபத்துகளும் நடக்கின்றன. இதில் மனிதர்கள் காயமடை கின்றனர், சில சமயங்களில் நாய்கள் காயமடைந்து உயிரிழக்கின்றன. மாவட்டத்தில் 2024ல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 3788 பேர் சிகிச்சை பெற்றுள்ள னர். மொத்தத்தில் 11 ஊராட்சி ஒன்றியங் களிலும் 15 ஆயிரத்து 247 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். ஒன்றியம் வாரியாக ராமநாதபுரம் -2742, ஆர்.எஸ்.மங்கலம்-837, மண்டபம்-3300, திருப்புல்லாணி-805, திருவாடானை-1497, பரமக்குடி-1938 , போகலுார்- 256, நயினார் கோவில்-100, முதுகுளத்துார்-965, கமுதி-1938, கடலாடி - 869 நாய்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே தெருநாய்களை பிடித்து இனப்பெருக்க தடுப்பூசி போட வேண்டும். வெறிபிடித்த, நோய் தாக்கிய நாய்களை பிடித்து அவற்றிற்கு சிகிச்சை அளிக்க சம் பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி