உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்

வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்

பரமக்குடி: தேனி மாவட்டம் போடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு அமாவாசை என்பவரது அம்மாவுக்கு திதி கொடுக்க ராமேஸ்வரம் நோக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேர் வந்துள்ளனர். போடியைச் சேர்ந்த டிரைவர் ரகு வேனை ஓட்டினார். பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலை வாகைக்குளம் பாலம் இறக்கத்தில் டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்த நிலையில் வேன் கவிழ்ந்தது. இதில் செல்லப்பாண்டி, விஜயேந்திரன் உட்பட 16 பேர் பலத்த காயமடைந்தனர். அனைவரும் பரமக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உறவினர் சிவசாமி புகாரில் தாலுகா போலீஸ் எஸ்.ஐ., பிரிட்டோ விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ