வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நெய்ச்சோறு பிரசாதமாம்.பலே. பலே. கறி யுண்டா?
கீழக்கரை: ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா நாயகம் தர்கா கொடியிறக்கத்தை முன்னிட்டு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இன்று(மே 28) 18 ஆயிரம் கிலோ அரிசியில் நெய் சோறு பனை ஓலை பெட்டியில் வழங்கப்படுகிறது.தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஏப்., 29 ல் மவுலிது எனப்படும் புகழ் மாலையுடன் தொடர்ந்து 23 நாட்களுக்கு ஓதப்பட்டு வந்தது. மே 21 இரவு துவங்கி மறுநாள் மே 22 வரை மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா நடந்தது.இன்று (மே 28) கொடி இறக்கம் செய்யப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் எனப்படும் நெய்ச்சோறு அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் கூறியதாவது: ஏர்வாடி தர்கா கொடி இறக்கம் செய்யப்படும் நாளில் காலை முதல் மதியம் வரை இரண்டு இடங்களிலும், மாலை முதல் இரவு வரை தர்கா மேற்கு வாயில் பகுதியிலும் நெய் சோறு அன்னதானமாக வழங்கப்படுகிறது.ஏர்வாடி தர்காவில் அனைத்து சமுதாய மக்களுக்கும் 17 ஆயிரம் பனை ஓலை பெட்டிகளில் நெய் சோறு வைக்கப்பட்டு பார்சலாக வழங்கப்பட உள்ளது.இதற்காக பிரத்தியேகமாக பெரிய பாத்திரங்களில் உணவு தயாரிக்கப்படுகிறது. இயற்கை சார்ந்த முதல் தரம் வாய்ந்த உணவுப் பொருளாக தேர்வு செய்யப்பட்டு சமைக்கப்படுகிறது. துாத்துக்குடி பகுதியில் இருந்து பனை ஓலை பெட்டி வரவழைக்கப்பட்டுள்ளது.கொழும்பில் இருந்து வரவழைக்கப்பட்ட பட்டை, கிராம்பு, கேரளா தேங்காய் எண்ணெய், ஊத்துக்குளி நெய், டவுன் பாண்டா எனப்படும் ரம்ப இலை உள்ளிட்டவைகள் சேர்க்கப்படுகிறது.பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பனையோலை பெட்டி மூலமாக நெய்ச்சோறு உரிய முறையில் பேக்கிங் செய்து அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது.
ஏர்வாடி தர்காவில் பிரசாதமாக விநியோகிக்கப்படும் தப்ரூக் எனப்படும் நெய் சோறினை பெற்று அவற்றை யாத்ரீகர்கள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கின்றனர்.பனை ஓலை பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்படும் நெய் சோற்றினை வெள்ளைத் துணியில் பதப்படுத்தி உலர வைக்கப்படுகின்றன. அவற்றை எண்ணெய்யில் பொரித்து எடுத்து உணவாகவும் உட்கொள்கின்றனர். அல்லது உணவு சமைக்கும் பதார்த்தங்களில் நெய் சோற்றினை பிரசாதமாகவும் போட்டு பயன்படுத்தி உட்கொள்கின்றனர்.கொடி இறக்கத்தில் வழங்கப்படும் நெய் சோறு பிரசாதம் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற உணவாக விளங்குகிறது என்றனர்.
நெய்ச்சோறு பிரசாதமாம்.பலே. பலே. கறி யுண்டா?