உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கார் கவிழ்ந்து 2 பேர் காயம்

கார் கவிழ்ந்து 2 பேர் காயம்

திருவாடானை: சென்னை சைதாபேட்டையை சேர்ந்தவர் சாகுல் 50. இவர் குடும்பத்துடன் காரில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடந்த ஒரு திருமணவிழாவில் கலந்து கொண்டவர் ஏர்வாடி சென்றார். அங்கிருந்து திரும்பி தேவகோட்டையை நோக்கி திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.அப்போது சின்னக்கீரமங்கலம் வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பாலமுருகன், ஷா ஆகிய இருவரும் காயமடைந்து திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை