உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த 2 இளைஞர்கள் குண்டாஸில் கைது

குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த 2 இளைஞர்கள் குண்டாஸில் கைது

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் தனியார் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்த நிலையில் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.டிச., 23ல் ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் புதுக்கோட்டை திருமயத்தை சேர்ந்த முத்து 55, உறவினர்களுடன் புனித நீராடியதும், அங்கிருந்த தனியார் பெண்கள் உடை மாற்றும் அறைக்கு அவரது மகள், உறவினர்கள் உடை மாற்ற சென்றனர். அறைக்குள் ரகசிய கேமரா இருப்பதை முத்துவின் மகள் கண்டுபிடித்தார். இதையடுத்து ராமேஸ்வரம் கோயில் போலீசாரிடம் முத்து புகார் செய்தார்.உடைமாற்றும் அறை நிர்வாகி ராமேஸ்வரம் ராஜேஷ் கண்ணன் 34, பணியாளர் மீரான் மைதீன் 38, இருவரையும் போலீசார் கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர். இருவரும் பல மாதங்களாக ரகசிய கேமரா பொருத்தி பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து அலைபேசியில் பார்த்துள்ளனர்.இவர்களது அலைபேசியில் பெண்கள் உடை மாற்றும் 120 வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பாலியல் வக்கிரபுத்தி கொண்ட இருவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., சந்தீஷ் கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோனுக்கு பரிந்துரைத்தார். அதன்படி இருவரையும் குண்டாசில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி ராமேஸ்வரம் கோயில் போலீசார் இருவரையும் குண்டாஸில் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை