உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி அருகே டவுன் பஸ் மீது ஒன் டூ ஒன் பஸ் மோதி விபத்து 20 பயணிகள் காயம்

பரமக்குடி அருகே டவுன் பஸ் மீது ஒன் டூ ஒன் பஸ் மோதி விபத்து 20 பயணிகள் காயம்

பரமக்குடி: பரமக்குடி அருகே பார்த்திபனுார் பகுதி மதுரை நான்கு வழி சாலையில் அரசு பஸ்கள் மோதிய விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர். பரமக்குடி அருகே மதுரை நான்கு வழிச் சாலையில் பார்த்திபனுாரில் இருந்து பரமக்குடி நோக்கி 27ம் எண் அரசு டவுன் பஸ் நேற்று மதியம் 12:30 மணிக்கு வந்தது. தொடர்ந்து திருவரங்கி பஸ் ஸ்டாப்பில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் புறப்பட தயாரானது. அப்போது மதுரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி ஒன் டூ ஒன் அரசு பஸ் வேகமாக வந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த டிரைவர் அரிமுருகன் நின்றிருந்த டவுன் பஸ் மீது நிலை தடுமாறி மோதினார். இதில் ஒன் டூ ஒன் பஸ் முன்புறம் உருக்குலைந்த நிலையில் சென்டர் மீடியினில் ஏறி நின்றது. இந்த விபத்தில் ராமநாதபுரம் சரோஜா 50, பிடாரிசேரி மாரியம்மாள் 65, பரமக்குடி கோவிந்தம்மாள், மண்டபம் கமாலியா பேகம் 67, டவுன் பஸ் கண்டக்டர் துரை 38, உட்பட 20 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் பார்த்திபனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் உள்ளிட்டோர் மீட்டு பரமக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சரோஜா மகன் கோகுல் 22, புகாரின் பேரில் பார்த்திபனுார் எஸ்.ஐ., சரவணன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை