மேலும் செய்திகள்
போக்சோ வழக்கில் டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
17-Oct-2024
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே புளியங்குடியைச் சேர்ந்த மும்மூர்த்தி மகன் கோகுலகண்ணன் 24. ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கொரோனா காலக்கட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு சிறுமியுடன் கோகுலகண்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதில் சிறுமி கர்ப்பமானார். 2021 மே 7ல் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. முதுகுளத்துார் போலீசார் போக்சோ பிரிவில் கோகுலகண்ணனை கைது செய்தனர்.இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.கோகுலகண்ணனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5000 அபராதம் விதித்தும் நீதிபதி கோபிநாத் தீர்ப்பளித்தார்.
17-Oct-2024