உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடற்கரையில் 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கடற்கரையில் 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிமுனை சரக்கு வாகனத்தில் கடத்த இருந்த 2000 கிலோ ரேஷன் அரிசி மூடைகளை கடற்கரையில் மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.தொண்டி அருகே முள்ளிமுனை கடற்கரையில் ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல் கிடைத்தது. மரைன் எஸ்.ஐ., கதிரவன், நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் போலீசார் சென்று கடற்கரையில் நின்ற சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 50 மூடைகளில் 2000 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. சரக்கு வாகனம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காராவயலை சேர்ந்த வாகன டிரைவர் கிேஷார் 22, உதவியாளர்கள் பீகார் மாநிலம் பாஸ்மனை சேர்ந்த மனோஜ்குமார், அதே மாநிலம் மோத்துாரை சேர்ந்த அன்சுகுமார் 19, ஆகிய மூவரையும் கைது செய்தனர். சரக்கு வாகனத்தில் இருந்த ரேஷன் அரிசி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ரேஷன் அரிசியை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரிசி ஆலைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை