மேலும் செய்திகள்
வேட்டி, சேலை பணி டிச., 31க்குள் முடிக்க உத்தரவு
01-Oct-2024
பரமக்குடி: தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அரசு வழங்க வேண்டிய ரிபேட் பாக்கித் தொகை ரூ. 250 கோடி வழங்காமல் உள்ளதால் சங்கங்கள் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன. மாநில அளவில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் 1150 க்கும் மேல் இயங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உட்பட ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள சங்கங்களில் துண்டு, வேட்டி, கைலி, காட்டன், பம்பர், பட்டு சேலைகள் என உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து கூட்டுறவு சங்க துணி ரகங்களுக்கு 20 சதவீதம் ரிபேட் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி ஒவ்வொரு சங்கத்திலும் உற்பத்தி செய்யப்பட்ட தொகைக்கு ஏற்ப ரிபேட் கிடைக்கிறது. இந்நிலையில் ஒரு ஆண்டை நான்கு காலாண்டுகளாக பிரித்து மாநில அரசு ரிபேட் தொகையை ஒதுக்கீடு செய்கிறது. ஒவ்வொரு காலாண்டிற்கும் 62.50 கோடி ரூபாய் ரிபேட் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் 2023 அக்., மாதம் காலாண்டு துவங்கி 2024 செப்., முடிய ஓராண்டு காலமாக ரிபேட் வழங்காமல் ரூ.250 கோடி நிறுத்தி வைத்துள்ளது.இதனால் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களுக்கு கச்சா பொருட்களை வழங்க முடியாமல் உள்ளது. மேலும் பணியாளர்கள் சம்பளம் மற்றும் நெசவாளர்களின் கூலி வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க கூட்டுறவு சங்கங்களை பாதுகாக்கும் நோக்கில் உடனடியாக தமிழக அரசு ரிபேட் பாக்கித் தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
01-Oct-2024