பரமக்குடியில் மாவட்ட அளவிலான 27ம் ஆண்டு வலுதுாக்கும் போட்டி
பரமக்குடி:பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான 27ம் ஆண்டு வலுதுாக்கும் போட்டிகள் நடந்தது. சங்க மாவட்ட கவுரவ தலைவர் பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்தார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. பெண்கள் பிரிவில் 38 கிலோ 43, 47, 52, 57, 63 கிலோ உடல் எடை பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடந்தது. ஆண்கள் பிரிவில் 53 கிலோ 59, 66, 74, 83, 93, 105, 120 மற்றும் 120 கிலோவுக்கும் மேல் என உடல் எடை பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பாரதியார், பிரண்ட்ஸ், சுதந்திரா, சாம்பியன், யோகாசனா, ஏ.வி.எஸ்.என்.எஸ்., ஏ.வி.ஐ.எஸ்., ஹெச்.ஆர்.பிட்னஸ் ஆகிய ஜிம்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டிகள் ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ், டெட் லிப்ட் ஆகிய 3 பிரிவுகளில் நடந்தது. இவற்றில் அதிக வலு துாக்கிய வீரர், வீராங்கனைகள் ஒவ்வொரு பிரிவிலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பரிசளிப்பு விழாவில் தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். செயலாளர் கோபி உட்பட துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.