உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட 320 கிலோ கஞ்சா பறிமுதல் இலங்கையில் 4 பேர் கைது

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட 320 கிலோ கஞ்சா பறிமுதல் இலங்கையில் 4 பேர் கைது

ராமநாதபுரம்:-தமிழக கடலோரப் பகுதியிலிருந்து இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பகுதிக்கு இரண்டு பைபர் படகுகளில் கடத்தப்பட்ட 320 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர். தமிழகப்பகுதிகளிலிருந்து சமையல் பொருட்கள், போதை பொருட்கள், போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்டவை எளிதில் இலங்கைக்கு கடத்தி செல்லப்படுகின்றன. இதுபோல கஞ்சா கடத்தி வருவதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை இலங்கை காங்கேசன் துறை, பருத்தித்துறை, நெடுந்தீவு ஆகிய கடற்பரப்புகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்திய கடல் பகுதியிலிருந்து சர்வதேச கடல் எல்லையை கடந்து பருத்தித்துறை பகுதிக்கு வந்த இரு பைபர் படகுகளை நீண்ட போராட்டத்திற்கு பின் மடக்கிப்பிடித்தனர். சோதனையிட்டதில் இரு படகுகளிலும் 320 கிலோ கஞ்சா பார்சல்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து அதை கடத்திய இலங்கையை சேர்ந்த 4 பேரை கைது செய்து பருத்தித்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரித்தனர். தமிழக கடற்கரை பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதன் இலங்கை மதிப்பு ரூ.9.60 கோடி. கைது செய்யப்பட்டவர்கள், கஞ்சா, பைபர் படகுகளை பருத்தித்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி