உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தடையை மீறி ஆர்ப்பாட்டம் பெண்களுடன் 342 பேர் கைது

தடையை மீறி ஆர்ப்பாட்டம் பெண்களுடன் 342 பேர் கைது

பரமக்குடி: பரமக்குடி ஓட்ட பாலம் பகுதியில் ஒருங்கிணைந்த அனைத்து வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பரமக்குடியில் நேற்று அனைத்து வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய நிலையில் போலீசாரால் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பாலா தலைமையில் ஏராளமானோர் அப்பகுதியில் கூடினர்.தொடர்ந்து சமூக ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவோர் மீது தமிழக அரசு மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது போலீசார் 62 பெண்கள் உட்பட 342 பேரை கைது செய்தனர். அங்கு கூடியிருந்தவர்கள் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட வாகனங்களின் முன்பு அமர்ந்து மறியல் செய்ய முற்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.பி., சந்தீஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ