உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 40 பேர் உயர்கல்வி படிக்க நடவடிக்கை

மாணவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 40 பேர் உயர்கல்வி படிக்க நடவடிக்கை

ராமநாதபுரம்: உயர்கல்வி பெறுபவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 72 மனுக்கள் பெறப்பட்டு 40 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் பள்ளிகல்வித் துறை சார்பில் உயர்கல்வி பெறுபவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து உயர்கல்வி பெறுவதன் அவசியம் குறித்துப் பேசினார். மாணவர்கள், பெற்றோரிடம் கோரிக்கைகள் தொடர்பான 72 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 40 மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி படிப்பை தொடர ஐ.டி.ஐ., கல்லுாரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மாவட்ட ஆய்வு குழு அலுவலர் ஜேன் கிறிஸ்டிபாய், மாவட்ட கல்வி அலுவலர்கள் தொடக்க கல்வி சேதுராமன், மெட்ரிக் பள்ளிகள் ரவி, இடைநிலை கல்வி(பொ) அம்பேத்கர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !