மேலும் செய்திகள்
நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி
02-Jun-2025
திருவாடானை: தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் ஆடுகளை கடித்ததில் 50 ஆடுகள் பலியாகியுள்ளன. திருவாடானை, தொண்டி பகுதியில் சில மாதங்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் கூட்டமாக சென்று வீடுகள் முன்பு கட்டியிருக்கும் ஆடுகளை கடிக்கின்றன. இதனால் ஆடு வளர்ப்போருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.எஸ்.பி.பட்டினம் அருகே எட்டிசேரி கிராம மக்கள் கூறியதாவது: இறைச்சி கழிவுகளையும், இறந்த கோழிகளையும் சாப்பிட்டு பழகிய தெருநாய்கள் அவை கிடைக்காத போது வெறி பிடித்த நிலையில் கிராமங்களில் இரவு நேரங்களில் வீடுகள் மற்றும் கொல்லைபுறத்தில் கட்டியிருக்கும் ஆடுகளை கடிக்கின்றன.சில நாட்கள் சென்ற பின் வாயில் நுரை தள்ளி ஆடுகள் இறக்கின்றன. கடந்த மூன்று மாதங்களுக்குள் இக்கிராமத்தில்50க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. இப்பகுதியில் ஏராளமான குடும்பத்தை சேர்ந்தவர்கள் கால்நடை வளர்ப்பதை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். ஆடுகளை நம்பி பிழைப்பு நடத்தி வரும் விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. அரசு உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். வெறிநாய் கடித்து இறந்த ஆடுகளை கணக்கெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
02-Jun-2025