மேலும் செய்திகள்
பழைய அரசு பஸ்கள் மேலும் ஓராண்டு இயங்க அனுமதி
28-Sep-2024
ராமநாதபுரம் : தமிழகத்தில் 15 ஆண்டுகள் முடிந்து காலாவதியான 6247 அரசு வாகனங்களை மேலும் ஒராண்டு இயக்க காலநீட்டிப்பு வழங்கி கூடுதல் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டார்.மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டம் 1989ல் விதி 52 ஏ-ன்படி அரசு சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் 15 ஆண்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். பின் அந்த வாகனங்கள் உடைத்து நொறுக்கப்படும். ரோட்டில் ஓட்டுவதற்கான தகுதியை இழந்து விடும். அதற்கான அனுமதி தானாக ரத்து செய்யப்படும்.தற்போது தமிழக அரசு போக்குவரத்துக்கழகம், தீயணைப்புத்துறை, போலீஸ், ஆம்புலன்ஸ், சட்ட ஒழுங்கு பராமரிப்பு, குடும்ப நல சுகாதாரம் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் இயக்கப்படும் வாகனங்கள் 15 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அந்த வாகனங்களுக்கு ஒராண்டு கால நீட்டிப்பு வழங்கி 2025 செப்., 30 வரை இயக்க அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு துறையின் கீழ் பல்வேறு அலுவலகங்களில் 14 ஆயிரத்து 611 வாகனங்கள் உள்ளன. இதில் 6247 வாகனங்கள் 2024 செப்., 30 முதல் 15 ஆண்டுகள் நிறைவு பெற்று மேலும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களை இயக்க பிட்னஸ் சான்றிதழ் வழங்கி ஒராண்டுக்கான வரிகளை பெற்று ரோடுகளில் இயக்க அனுமதிக்க வேண்டும் என அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் கூடுதல் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டார்.
28-Sep-2024